கொரோனா அவசரகாலநிலை முடியும்வரை அரச ஊழியர்கள் தமது வரவுப்பதிவை உறுதிசெய்யும் கைவிரல் அடையாளப்பதிவிடும் நடைமுறையைத் தவிர்க்கவேண்டும் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விரல் தொடுகையால் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் தொற்றுள்ள ஒருவர் கைவிரல் அடையாளம் வைத்து மறுகணம் அடுத்தவர் வைக்கின்றபோது இத்தொற்று ஏற்பட 100வீத வாய்ப்புள்ளது என்பதை சிறுகுழந்தைகளும் அறியும்.
கொரோனா பீதி உச்சக்கட்டத்திலிருக்கும்இந்தவேளையில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் ஒரு காவியாகஇருகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாட்டுக்குள்வரும்வரை இதனை நிறுத்துமாறு பலதொழிற்சங்கங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
