மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர்களில் ஒருவராக சிவலிங்கம் சதீஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதம் ஹட்டனில் நடைபெற்ற 08.03.2020) மகளிர் தின விழாவில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வழங்கி வைத்தார்.
சிவலிங்கம் சதீஸ்குமார் தனது 20வது வயதில் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.அதனை தொடர்ந்து ஜக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் கடந்த 30 வருடங்களாக அரசியலில் பல்வேறு தலைவர்களுடனும் இணைந்து செயற்பட்டதுடன் அமைச்சுகளின் சிரேஸ்ட ஆலோசகராகவும் இணைப்பு செயலாளராகவும் திணைக்களங்களின் தலைவராகவும் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் தமிழ் ஆங்கிளம் சிங்கள மொழிகளில் 10ற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரை கட்சியின் உப தலைவராக நியமிப்பது என அண்மையில் மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் (கவுன்சில்) கூட்டம் நடைபெற்ற பொழுது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
