அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், 110 மாடிகளை கொண்ட நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் அல்கொய்தா அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதலை நடத்தினர்.
2001ம் ஆண்டு, September மாதம் 11ம் திகதி நடந்த இந்த தாக்குதல் உலக வரலாற்றிலும், அமெரிக்காவிலும் ஒரு போதும் மறக்க முடியாத நாளாகும். இந்த தாக்குதலில் பொது மக்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் அத்தோடு 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இத் தாக்குதலால் $10 Billion சொத்துகள் நிர்மூலமாக்கப்பட்டன.
உலகையே உலுக்கியெடுத்த இந்த தாக்குதலை நடத்திய அல்கொய்தா அமைப்புக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்தனர்.
இதன் காரணமாக 2001ம் ஆண்டு, October மாதம் 7ம் திகதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா யுத்தத்தை ஆரம்பித்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை தூக்கி எறிந்து மக்களாட்சி என்ற போர்வையில் அமெரிக்கா சார்பான ஆட்சி உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு 19 வருடமாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் இருந்து வருகின்றனர்.
அப் படையினருக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து யுத்தம் நடந்தே வந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான அமெரிக்க படை வீரர்கள் உயிரிழந்தனர். பல லட்சம் அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். 25 லட்சம் மக்கள், வெளிநாடுகளில் அகதிகளாக இன்றும் வாழ்கின்றனர். 20 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தும் வாழ்கின்றனர்.
இவ் உள்நாட்டு யுத்தம் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் படையினருக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்தே வருகிறது. முடிவில்லாமல் நீண்டு வந்த இந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உதவியோடு தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். அமெரிக்காவும் இவ் ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த வருடம் September மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான் இடையே மீண்டும் மோதல் வலுத்தது.
இதற்கிடையே கடந்த வருடம் November மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொன்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.
.நீண்ட இழுபறிக்கு பின்னர், கடைசியில் ஒரு வழியாக அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே கட்டார் நாட்டின் தலைநகரான டோஹாவில் 29ம் திகதி அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
இது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக 31 உறுப்பினர்களை கொண்ட தலீபான் தூதுக்குழுவினர் டோஹா சென்றனர்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதை நேரில் பார்வையிட அமெரிக்காவின் வெளியுறவு செயலாளரை மைக் பாம்பியோவை அமெரிக்க ஜனாதிபதி டோஹாவுக்கு அனுப்பி வைத்தார்.
எதிர்பார்த்தபடியே, டோஹாவிலுள்ள 5 நட்சத்திர விடுதியில் மைக் பாம்பியோ முன்னிலையில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதரும், தலீபான் துணைத்தலைவரும் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் 19 வருடமாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வருகிறது.
தினந்தோறும் குண்டுவீச்சுகளையும், ஏவுகணை தாக்குதல்களையும், ரொக்கெட் வீச்சுகளையும், துப்பாக்கி சூடுகளையும் பார்த்து நிலை குலைந்து போய், இனி ஒரு விடியல் வராதா என்று ஏங்கித்தவித்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் நிம்மதியை தந்தது. .
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கூட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் வெளியிட்டன.
அதன் முக்கிய அம்சங்களானவை:-
* ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், 135 நாளுக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும்.
* 14 மாதங்களில் நேட்டோ படை வீரர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள்.
* ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். எதிர்வரும் 10ம் திகதி நோர்வே நாட்டிலுள்ள ஓஸ்லோ நகரத்தில் தொடங்கும்.
* இரு தரப்பு கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள். (5 ஆயிரம் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் படையினர் 1,000 பேர் தலீபான்கள் சிறையில் இருக்கின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, அல்கொய்தா அமைப்புடனான தொடர்புகளை தலீபான்கள் விட்டுவிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கும் 5 ஆயிரம் தலீபான் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்காவால் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
ஆனால், தலிபான் கைதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி திடீர் திருப்பமாக நேற்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி:-
கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வாக்குறுதி அமெரிக்காவால் அளிக்கப்படக் கூடியதல்ல. இது தொடர்பாக எனது அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் கைதிகளை விடுதலை செய்ய நான் தயாராக இல்லை. தலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக வேண்டுமானால் இந்த கோரிக்கை இருக்கலாம். ஆனால், இதை முன்நிபந்தனையாக எங்களிடம் வலியுறுத்தக் கூடாது’ என குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பெருமுயற்சியால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மையின் ஈரம் காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசாங்க படையினர் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர்.
தலிபான் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஜபியுல்லாஹ் முஜாஹித் இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
‘வன்முறை குறைப்பு தற்போதுடன் முடிவுக்கு வருகிறது. எங்களது நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
(அமெரிக்கா-தலிபான்) ஒப்பந்தத்தின்படி, எங்களது வீரர்கள் ( தலீபான்கள் ) வெளிநாட்டு ரானுவத்தினர் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஆனால், காபூல் அரசாங்க நிர்வாகத்திலுள்ள ரானுவம் மீது எங்களது தாக்குதல் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.