நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் பரவலை தொடர்ந்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகின இதனால் பலருக்கு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்து பருப்பு, டின் மீன், வெங்காயம், முட்டை, ஆகிய பொருட்களின் விலை குறைத்தன. ஆனால் குறைக்கப்பட்ட எந்த பொருளும் இன்றைய தினம் குறித்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் 6 மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கு இன்று (30) காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மலையக நகரங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்தனர் ஆனால் குறைக்கப்பட்ட எந்த பொருளும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சில கடைகளில் விலை குறைக்கப்பட்ட பருப்பு ஒரு கிலோ 145 ரூபாவுக்கும், டின் மீன் 200 ரூபாவுக்கும் விற்பனை செய்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அதிகமான கடைகளில் குறைக்கப்பட்ட பொருட்கள் இருக்கவில்லை என்றும் பலர் தெரிவித்தனர்.
முட்டை, டின் மீன், பருப்பு, பெரிய வெங்காயம் போன்றவற்றிற்கு அரசாங்கம் நிர்ணய விலைக்கு விக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தபோதிலும் அந்த விலைக்கு அதிகமாகவே பல கடைகளில் பொருட்கள் விற்பனை செய்வது காணக் கூடியதாக இருந்தன.
இதேவேளை பொகவந்தலாவை பொலிசாரால் கடந்த 28 ஆம் திகதி ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 16 பேர் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் செய்யப்பட்டனர்.
இதில் பொகவந்தலாவை மோரா பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேரும் ஊரடங்கு காலப்பகுதியில் வீதிகளில் நடமாடிய மற்றும் சண்டையிட்டு 12 பேர் இதில் அடங்குகின்றன.
இவர்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேருக்கு நாளை (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் ஏனைய 12 பேருக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
