அபு மபாஸ்-
குறிப்பாக அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் பாராளுமன்றத்துக்கு சராசரியாக 410,000 வாக்குகள் அளிக்கப்படவிருக்கின்றன. இதில் கடந்த காலத்தேர்தலை விட கொஞ்சம் வித்தியாசமான தேர்தல் முடிவுகளையே எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் 75,000 வாக்குகளுக்குள்ளேயே பெறுமாக இருந்தால் ஒரு ஆசனம் அல்லது இரண்டு ஆசனத்தை ஐக்கிய தெசிய கட்சியுடன் இணந்து கேட்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் மொட்டுக் கட்சியின் சிங்கள வாக்குகள் மட்டும் 95000 இருக்கும் இவ்வேளை அவர்களுக்கும் இரண்டு ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருந்தாலும் குதிரை மொட்டுவுடன் இணைந்து கேட்கும் பட்சத்தில் மொட்டு 3 ஆசனங்களைக் கைப்பற்றும் மீதியாக இருக்கும் 2 ஆசனங்களில் யானைச்சின்னத்தில் போட்டியிடும் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மயில், ஜேவிபி ஆகிய கட்சிகள் காத்திருக்கின்றன. இவற்றுள் குதிரை தனிமையில் களமிறங்கவில்லை என்றால் மயிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தலா ஒரு வீதம் ஆசனம் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
