கல்முனை மாநகரில் ஊரடங்குசட்டம் அமுல்

விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் பொதுமக்களை கட்டுப்படுத்த முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.


ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று(21) முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்திய சாலைகளுக்கு வரும் நோயளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -