சீனா பொலன்னறுவையில் நிர்மாணிக்கும் சிறுநீரக வைத்தியசாலை எனக்கு கிடைத்த பரிசு! - முன்னாள் ஜனாதிபதி





ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி:-

சீன ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக கேள்விப்பட்டேன். சிறுநீரக வைத்தியசாலை நான் கொண்டு வந்தது. நான் நிர்மாணித்தது. எனக்கு கிடைத்த பரிசு. அதில் எவரும் முட்டையிட அனுமதிக்க மாட்டேன்.

நானே அந்த வைத்தியசாலையின் பணிகளை மேற்கொள்வேன். முட்டையிட முடியாதவர்கள் வேறு நபர்கள் கட்டிய கூட்டில் முட்டையிட சில முயற்சித்து வருகின்றனர். அது வேறு கதை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -