இரண்டாவது நாளாகவும் நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை



ன்றைய தினம் (26) மாலை 4.45 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, இரண்டாவது நாளாகவும் நாட்டில் இதுவரை எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி தற்போது மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -