கந்தளாயில் உள்ளள வயல்வெளிகளில் இனந்தெரியாத ஒரு வகையான அரக்கொட்டியான் நோய் தாக்கம். ஐந்நூறு ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிப்பு.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அறுவடை மேற்கொள்ளும் நிலையிலுள்ள வயல்வெளிகளில் இனந்தெரியாத ஒரு வகையான அரக்கொட்டியான் நோய் ஒன்று பரவுவதால் பெரும் போகத்தில் சுமார் ஐந்நூறு ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்திலுள்ள பேராறு,போட்டங்காடு,பழையவெளி,மற்றும் வான்எல,சூரியபுர போன்ற பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் ஒரு வகையான அரக்கொட்டியான் தாக்கத்தினால் வயல் நிலங்கள் கருகி வருவதனால் நெற் பதர்களாக காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் கடன் காரர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் நிலையிலே இந்நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந் பெரும் போகத்தில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதால் மக்கள் கவலையடந்துள்ளதோடு அரசாங்கம் விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -