பாராளுமன்றத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு


மினுவாங்கொடை நிருபர்-
திர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளைத் தெரிவு செய்யும் பணி நிறைவு பெற்றிருப்பதுடன், அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் கடமைகள் குறித்து அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விண்ணப்பங்களை 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -