தேர்தல்கள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை, உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 889 வாக்காளர்கள் (1,62,63,889) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வருடத்தில் (2020) நடைபெறக் கூடிய தேர்தல்களில், 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பின்படியே வாக்களிப்பு இடம்பெறுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன பீ.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கையை விடவும் 2019 ஆம் ஆண்டில் புதிய வாக்காளர்களது எண்ணிக்கை 2,71,789 ஆக அதிகரித்துள்ளது. இளம் வாக்காளர்களான இவர்கள், இம்முறை முதற் தடவையாக வாக்களிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
