கொரோனாவால் 21 வயதில் உயிரிழந்த கால்பந்து பயிற்சியாளர்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


ஸ்பெயின் நாட்டின் மலகாவை தளமாகக் கொண்ட அட்லெடிகோ போர்டடா ஆல்டாவின் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரான்சிஸ்கோ கார்சியா (21) என்பவர் நிர்வகித்து வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதில் இறுதியாக கொரோனா வைரஸின் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்தோடு அல்லாமல் அவருக்கு ரத்த புற்றுநோயும் இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் அவர்  ஞாயிற்றுக்கிழமையியன்று உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் வயது மற்றும் மலகா பிராந்தியத்தில் இந்த வைரஸால் இறக்கும் 5வது நபராகும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வரை, அவர் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றியும் அறிந்திருக்கவில்லை. முன்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -