திருகோணமலையில் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு(16) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனக்குடா, சுமேதகம,கொட்பே மற்றும் நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 21,25,22 மற்றும் 24 வயதுடைய ஐவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மூவர் தலா நாற்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையிலும், இருவர் தலா முப்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை தமது உடைமையில் வைத்திருந்த நிலையில் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வைத்து ஐந்து சந்தேக நபர்களையும் 180 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிப்பதோடு,சந்தேக நபர்கள் ஐவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
