பேஸ்புக் ஒன்றுகூடல் ; 17 பெண்கள் உள்ளிட்ட 77 பேர் கைது..

ஐ. ஏ. காதிர் கான்-

ன்னிபிட்டிய, "அரலிய உயன" பொது மைதானத்தில், அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டு இடம்பெறும் நிகழ்வு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பில், 77 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற குறித்த ஒன்று கூடல், பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இதன்போது, 19 தொடக்கம் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 60 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், கொழும்பு, வத்தளை, பன்னிபிட்டிய, கடுவலை, பத்தரமுல்லை, மீகொடை, ஹோமாகம, அக்குரணை, கோணகல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் (09) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -