ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பொகவந்தலா மற்றும் நோர்வூட் பகுதியில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 07 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி பகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 04 பேரும் போட்ரி பகுதியில் ஒருவருமாக மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று மாலை (22) நான்கு மணியளவில் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்விக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதே வேளை பொகவந்தலா செபல்டன் தோட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய இருவர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஊரடங்கு சட்டத்தினை மீறும் வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதே வேளை நேற்று இரவு சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில் கைது செய்யப்பட்ட 08 இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ததன் பின் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்;பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.