கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான நபர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா வைரஸ் இல்லையென அறிக்கை


எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான நபர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா வைரஸ் இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்கர் டி.ஜி மெலிண்டன் கொஸ்தா தெரிவித்தார்.

கந்தளாய், வான்எல,ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞயொருவருக்கு கொரொனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள கொரொனா வைரஸ் ஆராய்ச்சி மத்திய நிலையத்திற்கு நேற்று(21) மாலை அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலே அதன் அறிக்கை இன்று(22) மாலை கொரொனா வைரஸ் இல்லையென கிடைத்துள்ளதாகவும்,கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
குறித்த இளைஞர்  ஹபரன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் ஜயந்திபுரவிற்கு சென்ற நிலையில் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம்(21) கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் கொரொனா வைரஸ் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு கொரொனா வைரஸ் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதன் அறிக்கையே பாதுகாப்பாக கொரொனா இல்லையென தகவல் கிடைத்துள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
இவைதொடர்பாக திருகோணமலை, கந்தளாய் பிரதேச வாழ் மக்கள் அச்சம்கொள்ளவேண்டிய தேவை இல்லையெனவும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -