ஆயுள்வேதம் என்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் என்பதையே மிக முக்கியமாக கூறுகிறது.


யுள்வேதம் என்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் என்பதையே மிக முக்கியமாக கூறுகிறது. ஆயுள்வேத வைத்தியத்தில் முன்னைய காலம் தொட்டே நோய் தடுப்பு முறைகள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது.அதனில் தொற்றுகள் ஊரில் பரவும் போது எங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்படி அதிகரித்துக் கொள்வதென்பதையும், பண்டைய காலந் தொட்டே இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த நோய்த் தடுப்பு முறைகள் பற்றியும், நவீன ஆய்வுகளில் ஆயுர்வேத மருத்து முறையின் மருத்துவக் குணங்கள் பற்றிய ஆய்வுகளையும் வைத்து நான் சிலதை பகிரந்து கொள்கிறேன்.அதனில் இந்த கொரோனா பற்றிய முற்காப்பு முறைகள் என்ன?

கொரனாவுக்கு ஆயுள்வேத மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா என்றால் எந்த ஆய்வும் அது பற்றி இல்லை.என்றாலும் ஆயர்வேத மருத்துவத்தில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பின்வரும் படிமுறைகளை மேற்கொள்ள முடியும்.

1. குடிநீர்( கசாயம்) . கொத்தமல்லி, சுக்கு, மரமஞ்சள் அவித்துக் குடித்தல்.ஆய்வுகளில் கொத்தமல்லி என்பது வைரசுக்கு எதிராக தாக்கம் செலுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.அத்தோடு சுக்கு ஓருவரு சளியை போக்கும்/ நீக்கும் மருந்து என ஆயுர்வேத புத்தங்கள் கூறுகிறது.அத்தோடு பல சளி தொடர்பான நோய்களுக்கு சுக்கு பிரதான மருந்தாகும்.மரமஞ்சள் அல்லது மஞ்சட்கொடி என்பது ஆயுர்வேத/மற்றும் சுதேச மருத்துவத்தில் பயன் படும் இரத்ததில் உள்ள கிருமிகளை சுத்திகரிக்கும்/ கொல்லும்/ நீக்கும் மருந்தாகும்.எனவே இவ்வாறான ஒரு கசாயத்தை பருகுவதால் உங்கள் உடம்பில் நோய் எதிப்பாற்றலை பேணிக் கொள்ளலாம்.
அதே நேரம் இந்த மருந்து மூலம் நீராவி பிடித்தல் கூட நல்ல பயனைத் தரும்.கொரோனா வைரஸ் உயர் வெப்பநிலையில் அழியக் கூடியது.எனவே self quarantine செய்து கொள்ளக் கூடிய ஒருவர் இதனை பாவிப்பது உகந்தது.

2. சீந்தில் : ரசகிந்த என்பது சிங்களப் பெயர்.இதனோடு நெல்லி.விட்டமின் C கூடிய ஒரு பழம்.நெல்லி+ ரசகிந்த பாணம் பொதுவாக உடலில் செய்யும் வேலை உடலின் இரத்தத்தை சுத்திகரிப்கதோடு ரசகிந்த காய்ச்சலின் போது ஆயர்வேர மருத்துவத்தில் பாவிக்கப் படும் பிரதான மருந்து.எனவே உங்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் என்ற அச்சத்தில் self quarantine செய்ய இதனை தயாரித்து பருகலாம்.

இவை தவிர ,புகை பிடித்தல்.
புகை பிடித்தல் என்பது சாதாரண நடைமுறையில் ஆயுர்வேத மருத்துவத்தில் உங்கள் சுற்றுப் புறச் சூழல் மற்றும் நீங்கள் பாவிக்கும் பொருட்களில் உடைகளில் உள்ள,வீட்டில் உள்ள பொருட்களில் தங்கிய கிருமிகளை அழிக்கப் பயன் படுத்தும் முறையாகும்.இதற்காக நீங்கள்
குந்திரிக்கம்,அகில், துளசி,மஞ்சள்/ கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை என்பவற்றை தூள் செய்து சாம்பிராணியோடு சேர்த்து சிரட்டை கறியை கொண்டு புகை பிடிக்கலாம்.நான் முன் சொன்னது போல இந்தப் புகை பிடிப்பதன் நோக்கம் உயர்வெப்பநிலையில் இந்த கிருமிகளை அழிப்பதே.சாதாரணதாக இந்த கொரோனா வைரஸ் கிருமிகள்50, 60 பாகை வெப்பநிலையில் அழியக் கூடியவை.எனவே இவ்வாறான முறைகளை பயன் படுத்தி உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆனால் உங்கள் கவனத்துக்கு

ஆயுள்வேத மருத்தவம் என்று சொல்லி தினமும் இவற்றை பாவிக்க வேண்டாம்.குறிப்பாக இந்த கொத்தமல்லி சுக்கு கசாயம் தினமும் குடிக்க வேண்டியதில்லை.self quarantine ல் உள்ள சந்தேகிப்பவர் ஒரு நாளை இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு பயன் படுத்தலாம்.இதை மீறி சும்மா இருப்பவர்கள் எல்லாம் தினமும் மருந்து குடிக்க வேண்டாம்.
இவற்றோடு நீங்கள் இயற்கையான உணவுகளை ,வீட்டில். சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள்.இரசாயப் பதாரத்தங்கள் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
நீண்ட பிரார்த்தனைகள் தொழுகை, சதகா, நோன்பு என்பனவும் உங்களுக்கு நோய் வராமலும் வந்தாலும் அதனில் பாதிப்புகள் வராமலும் பாதுகாக்கும்.இறைவன் எங்களை பாதுகாப்பானாக!

குறிப்பு.
இவை தற்பாதுகாப்பு மாத்திரமே. கொரோனா நோய்க்காண அறிகுறிகளாக இருமல்,உடற்சோர்வு,மூச்சுத்திணரல்,காய்ச்சல் என்று உள்ளவர்கள்,அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கட்டாயம் அரசாங்க மருத்துவமனைகளை நாடவும். இங்கே ஆயுர்வேத வைத்தியம் கை கொடுப்பதில்லை.

Dr sha shaheed (BUMS)
Community Health Medical officer in charge
PGD psychology
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -