தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் Taekwondo தற்காப்பு கலையில் பதக்கம் வென்ற வீரர்களை கௌரிக்கும் நிகழ்வு



சப்வான்-

2019 டிசம்பரில் நேபாளம் காத்மாண்டுவில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் Taekwond தற்காப்பு கலையில் பதக்கம் வென்ற வீரர்களை கௌரிக்கும் நிகழ்வொன்று இன்று (22) கண்டி கலகெதர இலங்கை வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வரலாற்றில் முதல் முறையாக டேக்வாண்டோ போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றெடுத்து நாட்டிற்கு பெருமையை பெற்றுத் தந்த ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள் நான்கு பேர் கெளரவித்து விருது வழங்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -