நிந்தவூரில் உணவகங்களில் சோதனை : பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி !!


நூருல் ஹுதா உமர்-

நிந்தவூர் பிரதேச உணவங்களில் (22) இன்று மாலை திடீரென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீரின் தலைமையில் இயங்கும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இந்நடவடிக்கைகளின் போது எவ்வாறு உணவுப் பொருட்களை கையாள வேண்டும் என்பதையும் உணவகங்களின் சுகாதார நிலைகளின் மேம்பாடு பற்றியும் உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு தெளிவாக விளக்கினர்.


உணவகங்களின் சுகாதார நிலைகளை சரியாக பின்பற்ற மறுக்கின்ற அல்லது பொடுபோக்காக இருக்கின்ற உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -