இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் முதன் முறையாக அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தபட்ட மாவட்ட மட்ட சதுரங்க போட்டி .

எம்.என்.எம்.அப்ராஸ்-

லங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் நடாத்தபட்ட
அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான
மாவட்ட மட்ட சதுரங்க போட்டிகள் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியலயத்தில் கடந்த 2020.02.22 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரை இடம்பெற்றது.

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே.சிவனேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் போட்டித்தொடர்களை இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஏ.எம். ஸாஹிர் அஹம்மட் நெறிப்படுத்தினார்.

முழுநாள் போட்டித் தொடராக இடம்பெற்ற இப் போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 20 பாடசாலைகளை சேர்ந்த 7 வயது தொடக்கம் 20 வயதுக்குட்பட்ட
சுமார் 290 மாணவர்கள் போட்டியில் பங்குபற்றினர்.

இப் போட்டியானது ஒவ்வொரு மாணவர்களுக்கும் 5 சுற்றுக்களாய் போட்டிகள் இடம்பெற்றதுடன்
பாடசாலை மாணவர்களின் சதுரங்க போட்டித்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தும் நோக்கிலும் நடாத்தப்பட்டது .
இப் போட்டித் தொடரில்
கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் போட்டியில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.
தேசிய மட்டத்தில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நடுவராக ஏ.எம்.சாகீர் அவர்களும், பிரதி தலைமை நடுவராக எம்.ஏ.சலாம் ஏனைய நடுவர்க்ளாக
எஸ்.எல்.எம்.ஸுஹ்தான், எம்.ஏ.எம்.கைஸான், டப்ளியூ.நிஜாஸ் ஆகியோர் கலந்து கொண்டர்.
மேலும் முதன் முறையாக அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில்
ஏற்பாடு செய்யப்பட் சதுரங்க போட்டித்தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -