சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா




சாய்ந்தமருது நிருபர்-
சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கலா பீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யு.எல்.எம்.காசிம் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் , கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான அல்ஹாஜ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் , அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எல்.எம்.அஷ்ரப் முதன்மைச்சொற்பொழிவாளராகவும் , மதுரங்குழி மேர்ஸி கல்வி வளாக பணிப்பாளர் ஏ பௌசுல் ரகுமான் , மதுரங்குழி மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டப் பணிப்பாளர் எம்..ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் வை.எம் ஹனிபா, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா தலைவரும் , அட்டாளைச்சேனை கிழக்கு அரபுக்கல்லூரியின் விரிவுரையாளருமான அல்ஹாஜ் .எம் .எம் சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -