இளைஞர் நாடாளுமன்றத்துக்கு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (22) நாடளாவியரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம் பெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தம்பலகாமப் பிரதேச செயலகத்திலும் இளைஞர் வாக்கெடுப்பு நடை பெற்று வருகிறது இம் முறை ஒன்லைன் மூலமான வாக்கெடுப்பு வாக்குப் பதிவுகள் இடம் பெற்று வருகிறது .தம்பலகாமப் பகுதியில் இம் முறை 1664 இளைஞர் வாக்காளர்கள் ஒன்லைன் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இதில் 05 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தற்போது ஒன்லைன் மூலமான வாக்களிப்பு துரிதமாக இடம் பெற்று வருகிறது .
குறித்த தேர்தலில் 18 வயது தொடக்கம் 29 வரையான இளைஞர் யுவதிகள் முன்னர் கூறப்பட்டவாறு டதிவு செய்திருந்தால் வாக்களிக்க முடியும் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலானது இது நான்காவது தேர்தலாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து வாக்களிப்பு நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

