காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண் மரணம்!

எச்.எம்.எம்.பர்ஸான்-

காத்தான்குடி-03, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற இவ்விபத்து சம்பவத்தில் ஓட்டமாவடி 3ம் வட்டாரம் அஸ்கா பேக்கரி வீதியைச் சேர்ந்த பாத்தும்மா (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த வாழைச்சேனை - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ் இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -