பன்மைத்துவம் மற்றும் நீதியின் ஆட்சி ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் மூலம் சமய சகவாழ்வைக் கட்டியெழுப்பலாம்.

எப்.முபாரக்-

ன்மைத்துவம் மற்றும் நீதியின் ஆட்சி ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் மூலம் சமய சகவாழ்வைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் Serving Humanity Foundation (SHF) அமைப்பினால் தேசிய சமாதான பேரவையின் ஒருங்கிணைப்புடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சர்வமத தலைவர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக பிரதேச சர்வமதக்குழு (LIRC) ஒன்றினை மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு என்ற கருத்திட்டதின் கீழ் உருவாக்கி தங்களின் வேலைத்திட்டங்களை திருகோணமலை பிரதேசத்தில் சமாதனம் சார் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

பிரதேச சர்வமதக்குழு அமைப்பின் அங்கத்தவர்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் இம்மாதம் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டுநாள் "பன்மைத்துவ பயிற்சிப்பட்டறை" நிகழ்வு ஒன்றினை Serving Humanity Founadtion நிறைவேற்றுப் பணிப்பாளர் மு.ம.அன்ஸாரி அவர்களின் தலைமையில் தேசிய சமாதனப் பேரவையின் அனுசரணையுடன் திருகோணமலை கிறீன் காடன் கொடேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளராக சப்ரகமுவா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உபுல் பிரியன்கர லேகம்கே அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -