பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு கொங்றீட் இடப்பட்ட கம்பளை, அம்புலுவாவ ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கான பாதை மக்கள் பாவனைக்கு இன்று (09.02.2020) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஆளுங்கட்சியில் நாமும் பங்காளிகளாக அங்கம் வகித்தோம். ஆனால், ஒருபோதும் ஆமாம் சாமி போடும் அரசியலை நடத்தவில்லை.
அநீதி இழைக்கப்படுமானால், தவறுகள் இடம்பெறுமானால் அரசாங்கத்துக்குள் இருந்தபடியே அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து, நீதிக்காக போராடினோம்.
அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் துணிந்து செயற்பட்டோம். அபிவிருத்தி அரசியலுக்கு சமாந்தரமாக, உரிமை அரசியலுக்கும் முன்னுரிமை வழங்கினோம்.
ஆனால், இன்று ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் அமைச்சர்கள் 'ஊமை வேடம்' தரித்தவர்களாகவே வழவம்வருகின்றனர். அரசாங்கம் எதனை செய்தாலும் தலையாட்டி பொம்மைபோல் தலையாட்டுகின்றனர்.
தேசிய சுதந்திர தினத்தில் இம்முறை தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. அமைச்சரவையில் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் இதற்கு எதிராக குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர்களால் வெளியிடமுடியாதநிலை ஏற்பட்டது.
மலையகத்தில் இன்று தனிவீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைகூட தொடரமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படியான தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் உரிமை அரசியலுக்கு முன்னுரிமை வழங்கப்போவதில்லை. எனவே, தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து - சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது." என்றார்.




