35 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் நியமனத்தின் போது உள்வாங்குங்கள்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ண்மையில் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் கூறப்பட்ட வயது எல்லையான 35 யை தளர்த்துமாறு கோரிக்கை விடுவதாக திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

கிண்ணியா அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான 53000 பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குதல் தொடர்பான விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ள நிலையில் அதன் வயதெல்லை 35 என கூறப்பட்டுள்ளது

இதை தளர்த்தி வயது வித்தியாசமின்றி உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடின்றி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க வேண்டும் என இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி,பிரதமன் ஆகியோர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

தேர்தல் வாக்குறுதியின் படி கூறப்பட்ட விடயங்கள் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குதல் பாராட்டக்கூடியது தங்களது கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு நியமனங்களை தங்களுக்கும் வழங்க வேண்டும்.

எனவும் திருகோணமலை மாவட்டத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட சுமார் 290 வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அரசாங்கத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வயது கட்டுப்பாடின்றி உள்வாரி வெளிவாரி பாகுபாடற்ற நிலையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

தற்போது அது மாற்று வடிவமாக மாறியிருப்பது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது இந்த நியமனத்தில் தாங்கள் உள்வாங்கப்படாவிட்டால் எதிர்காலத்திலும் நியமனம் பெற முடியாமல் போகும் கடந்த ஐந்து வருட காலமாக ஏமாற்றப்பட்டு வந்தோம்

பட்டதாரிகளின் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டே வருகிறோம் இதனை கருத்திற் கொண்டு 35 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் அரசாங்கம் உள்வாங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -