ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தோட்டத்தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது இது இவ்வாறு இருக்கின்ற போது முதலாளிமார் சம்மேளனம் கூட்டாக இணைந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு போதும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் தெரிவித்துள்ளன.
எனவே இன்று தோட்டங்கள் தனியாருக்கு விடப்பட்டுள்ளன. இநநிலையில் சம்பளத்தினை நிர்ணயம் செய்கின்ற பொறுப்பு முழமையாக அரசாங்கத்திற்கு இல்லை. என்பதனையே இவை சுட்டிக்காட்டுகின்றன. என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபை உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் இன்று (09 ) திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையி;ல்..
அரசாங்களம் ஆயிரம் ரூபா வழங்குவதாக உறுதியளித்தாலும் கூட கம்பனிகள் மறுக்கின்றன.
தோழிலாளர்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் மலையக தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக ஒ;வ்வொரு அரசியல் தலைமைகளும் இதனை செய்துவருவதனை வேதனையளிக்கின்றது.
ஒவ்வொரு தேர்தலிலும் தொழிலாளர்களுக்கு வைக்கும் இலக்கு, ஆயிரம் ரூபா சம்பள உயர்வு இது பாராளுமன்ற தேர்தல் என்றாலும் சரி ஜனாதிபதி தேர்தல் என்றாலும் இதனை கூறி இந்த மக்களை ஏமாற்றுகி;ன்றனர்.எனவே தொடர்ந்தும் தொழிலாகளை எமாற்றும் கபட நாடகங்களை அரசாங்கமும் மலையக பிரதிநிதிகளும் கைவிட வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பளம் கம்பனிகள் வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்று வெளிநாட்டு கம்பனிகளுக்காவது வழங்கி தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
தேர்தல்கள் வரும் போது ஆயிரம் ரூபா சம்பள விடயத்தினை பேசி பேசி மலையக அரசியல் தலைவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். சம்பள உயர்வென்று வரும் போது தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.அதனை தொடர்ந்து கம்பனிகளுக்கும் தொழி;ற்சங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு இறுதியில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஐம்பது ரூபா அல்லது நூறு ரூபா பிச்சைக்கொடுப்பது போல் கொடுக்கப்படுகின்றன. இதனை மாற்ற வேண்டும்.
எனவே தோட்டங்ளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு மலையக தலைமையகள் அலுத்தம் கொடுக்க வேண்டும்
தோடரும் இந்த நிலை தொடர்ந்து ஏற்படக இடமளிக்க கூடாது. அரசாங்கம் கம்பனிகள் சொல்வதை கேட்காமல் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.