மக்கத்துச் சால்வை வாசகர் வட்டத்தின் பௌர்ணமி இரவு ஒன்றுகூடலில் அமீர் அலி பங்கேற்பு.



எச்.எம்.எம்.பர்ஸான்-

ல்குடா, மக்கத்துச் சால்வை வாசகர் வட்டத்தின் பௌர்ணமி இரவு ஒன்று கூடல் சனிக்கிழமை இரவு (8) நாவலடி ஸஹ்வி கார்டனில் நடைபெற்றது.

வாசகர் வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான ஓட்டமாவடி அறபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச படைப்பாளர்களின் கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை நூல் வடிவில் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் பற்றி இதில் பேசப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு சமகால மற்றும் எதிர்கால அரசியல் விடயங்கள் பற்றி தன்னுடைய நிலைப்பாட்டை வாசகர் வட்டத்துடன் பகிர்ந்து கொண்டார்.

அத்தோடு வாசகர் வட்டத்தினர் பிரதேசத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை பாராளுமன்ற உறுப்பினர் ஏற்றுக் கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை தான் முன்னெடுத்து வருவதாக கூறினார்.

இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -