நீர்கொழும்பில் இளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியா கோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம்


ஐ. ஏ. காதிர் கான்-

ளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியா கோர்ப்ஸ் புலமைப்பரிசில் செயற்றிட்டம், இலங்கையின் பல பிரதேசங்களை மற்றும் ஊடக நிறுவனங்களைப் பிரதித்துவப்படுத்தும் சுமார் 20 (9-சிங்களம், 4-தமிழ், 7-முஸ்லிம்) இளம் ஊடகவியலாளர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை, நீர்கொழும்பில் இடம்பெற்றது.
 
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடனும், கைபேசியினைப் பயன்படுத்தி கதைகூறும் “மோஜோ” பயிற்சியினை உள்ளடக்கியதாகவும் இச்செயற்றிட்டம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்ட அங்குராப்பண நிகழ்வு, SDJF நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் பத்மஸ்ரீ வணிகசுந்தரவின் வருகையினைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
இச்செயற்றிட்டம் தொடர்பான அறிமுகம் மற்றும் மேலதிக விளக்கங்கள் SDJF செயற்றிட்ட ஊழியர்கள் ஊடாகத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்தப் பயிற்சியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு மோஜோ கிட்ஸ் (MoJo kits) களும் வழங்கப்பட்டன.

இச்செயற்றிட்டம், அனுபவம் வாய்ந்த வளவாளர்களான Mr. T. M. G சந்திரசேகர, specialist, Strategic Communications, ICTA, Mr. ஷான் விஜேதுங்க - Director Communications, இலங்கைப் பாராளுமன்றம், Ms. தாரிணி பிரிஸ்சிலா, பத்திரிகை ஆசிரியர், Bakamoono.lk, Mr. ஷிஹார் அனீஸ், ஆய்வாளர், Global Press Journal, Mr. K. C சாரங்க, செய்திப் பொது மேலாளர், TV தெரண, Mr. மொஹமட் பைறூஸ், பத்திரிகை ஆசிரியர், விடிவெள்ளி, Mr. கபில ராமநாயக்க, MoJo பயிற்சியாளர் மற்றும் SDJF நிறுவன வளவாளர்களான முஹம்மது அஸ்வர் மற்றும் ருவான் போகமுவ ஆகியோரினால் நடாத்தப்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக, ஊடகவியலாளர்கள் அனைவரும் அண்மையில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒரு வீடியோ கதை உருவாக்குவதற்கான பிரயோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஊடகவியலாளரும் இறுதியில் ஒரு வீடியோக் கதையினை உருவாக்கினர். அதனடிப்படையில், செயற்றிட்ட முடிவில் குறித்த கிராமத்தில் காணப்படும் சமூகப் பிரச்சினைகள் சம்பந்தமான 20 வீடியோக் கதைகள் உருவாக்கப்பட்டன.

இப் பயிற்சியினைத் தொடர்ந்து, பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் வேறுபட்ட கலாசார பின்னணியினைக் கொண்ட ஏனைய ஊடகவியலாளர்களுடன் சோடிகளாக 7 நாட்கள் கொண்ட கள விஜயத்தினை மேற்கொண்டு, குறித்த சமூகத்தின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளை பல்வேறு ஊடக (Multi Media) கதைகளாக உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களினுடாக வெளியிடவுள்ளனர்.

IREX நிறுவனத்தின் பிரதிநிதிகளான Ms. Alicia Phillips Mandaville, the Vice President of Global Program மற்றும் Ms. Jean Mackenzie, Chief of Party, IREX Sri Lanka, மற்றும் பலர் செயற்றிட்டத்தின் போது வருகை தந்து கதை உருவாக்கும் செயற்பாடுகளை அவதானித்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மீடியா கோர்ப்ஸ் செயற்றிட்டத்தினுடாக இதுவரை சுமார் 112 இளம் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளமை விசேட அம்சமாகும். இவ் Media Corps புலமைப்பரிசில் திட்டம், ஓர் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID மற்றும் International Research and Exchanges Board (IREX) நிறுவனங்களுடன் ஒண்றிணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -