கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பிரதேசங்களைக் அபிவிருத்தி செய்யமுடியும்.ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில்

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதன் மூலம் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களைக் கூடிய விரைவில் அபிவிருத்தி செய்யமுடியும் என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கல்பிட்டிய எத்தாளை வித்தியாலயத்தில் 15 இலட்சம் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மண்டபத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்; கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் விட்ட தவற்றைத் திருத்திக்கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் அமையவுள்ளது. ஆகவே அந்த தேர்தலில் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் மக்கள் தயாராக வேண்டும். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்றால், கடந்த வருடங்களைப் போன்று ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது வாக்குகளைச் சிதறடிக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கோ துணைபோகாமல் சிந்தித்துச் செய்யப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, அருந்திக்க பெனாண்டோ, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தாஹிர், கல்பிட்டிய பிரதேச சபை தலைவர் ஏ.எம். இன்ஸாப் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -