வாகன அனுமதிப் பத்திரத்துக்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்து, அதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிடும்போது,
2009 ஆம் ஆண்டில் தான் மேற்படி நிறுவனம் அந்தச் செயற்பாட்டை ஆரம்பித்தது.
அதனை ஒரு உடன்படிக்கை மூலம் அரசாங்கத்துக்கு சுவீகரிக்க முடியுமான போதும், எக்டா நிறுவனம் பல்வேறு காரணங்களைக் காட்டி அதனைத் தடுத்தது.
எவ்வாறாயினும், நாட்டில் மிக மோசமான மோசடிகளில் ஈடுபடும் நிறுவனமாக மோட்டார் வாகனப் போக்குவரத்து நிறுவனம் பேசப்படுகிறது. அந்த நிலையை மாற்றி எதிர்வரும் மூன்று வருடத்துக்குள் சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.