திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் வகாப் - பரீஸ் அண்மையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி முகைதீன் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் இவர் தனது ஆரம்பிக்கல்வி முதல உயர் கல்வி வரை தி- அல்- அக்ஸா கல்லூரியிலும் பீ.ஏ ,பட்டப்படிப்பினை இந்தியா தஞ்சாவூரில் பல் கலைக் கழகத்திலும் , நிறைவு செய்துள்ளார்.
இவர் கலாசார நிகழ்வுகளில் பங்கு கொண்டு பல பரிசில்களையும் , பாவோதல், பேச்சு , இசை, பாடல் போன்ற பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு முதலிடங்களையும் பெற்றுள்ளார்.
மற்றும் இஸ்லாமிய சமூக சேவை ஒன்றியத்தின் தலைவராகவும்,ரஹ்மி விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் கருமமாற்றியும் வருகின்றார்.
இவர் அப்துல் கமீது- அப்துல் வகாப் , முகம்மது சரீப்- தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
