இ.தொ.கா.அன்று முதல் இன்று வரை சமூக தேவையினையே நிறைவேற்றி வந்துள்ளது- எம்.ரமேஸ்வரன்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறைந்த தலைவர் ஐயாவின் காலத்திலும் சரி தொண்டமானின் காலத்திலும் சரி, இந்த சமூகத்திற்கு என்னென்ன தேவையோ அதனை இன்று வரை நிறைவேற்றி வந்துள்ளதாக மத்திய மகாண சபை முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று (23) பொகவந்தலா பிரிவில் 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் இல்லாத தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடமைப்பதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் 100 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (23 ) கொட்டியாகல தோட்டத்தில் பொகவந்தலாவை பிரிவில் இடம்பெற்றன.

குறித்த வீடுகள் ஏழு பேச்சஸ் காணியில் ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள், சமயலறை, குளியலறை, மலசலகூட வசதிகளுடன் ,மின்சாரம்,போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளுடன் சுமார் 750 சதுர அடிப்பரப்பில் அங்க சம்பூரணமான சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .. இந்த சமூகம் எப்போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸினையே நம்பி வந்துள்ளது.ஆகவே இந்த சமூத்தின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பும் இலங்கை

தொழிலாளர்காங்கிரஸ்ஸூக்கு மாத்திரமே உள்ளது.கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் எவ்வாறான அபிவிருத்திகள் தோட்டப்பகுதியில் நடந்தது என்று. வீடுகள் கட்சி பாரத்தே கொடு;க்கப்பட்டன.வீதிகள் தொழிற்சங்கம் பாரத்தே அமைக்கப்பட்டன.அபிவிருத்திகள் பெரும்பாலும் ஜனவரி மாதமும் ஆறாம் மாதமும் தான் நடைபெற்றன. காரணம் அந்த காலங்களில் தான் தொழிற்சங்கங்களுக்கு போம் போடுவார்கள்.ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சு பதவி இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி மக்கள் சேவையினை முன்னெடுத்துள்ளது. எனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் சமூக வலுவூட்டல்,தோட்ட உட்கட்டமைப்பு,சுய தொழில் என பல பொறுப்புகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் ஒப்படைத்துள்ளார்.

அதற்கு காரணம் அவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் வைத்துள்ள நம்பிக்கை தான்.

நேற்று முன்தினம் கூட வடக்குக்கும் கிழக்குக்கும் சென்று பல வீடமைப்பு திட்டங்களையும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களையும் ஆரம்பித்து வந்தார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் கட்சி தொழிற்சங்கம் பார்த்து வேலை செய்யும் நிறுவனமல்ல அது சமூக அக்கறையுடன் செயப்படும் நிறுவனம் என்பதனால், அனைத்து திட்டங்களும் அனைவரையும் சென்றடைய கூடிய வகையில் திடடங்களை முன்னெடுக்கும்.இதனை நீங்கள் எதிர்வரும் ஐநது வருட காலப்பகுதியில் கண்கூடாக பார்த்துக்கொள்ளலாம். எனவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த சமூக நல திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ,டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் அருளசாமி பரத் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், கணபதி கணகராஜ்,, இளைஞர் அணித்தலைவர் ஜீவன் தொண்டமான் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்.அனுசா சிவராஜா,நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ஏ.குழந்தவேலு உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -