இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.


காரைதீவு சகா-

ரண்டாவது உலக திருக்குறள்மாநாடு நாளை(21)வெள்ளிக்கிழமைகாலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது.

இந்தியா தமிழ்நாடுதமிழ்த்தாய்அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர்உடையார்கோயில் குணா எனும்பெரியார் இவ் உன்னதகைங்கரியத்தைஆரம்பித்துள்ளார்.
இவ்விழாவில்கலந்து கொள்வதற்காக உலகெங்கிலுமிருந்து பலதமிழ்அறிஞர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்தும் பல பேராளர்கள்அங்கு சென்றுள்ளனர். காரைதீவு திருவள்ளுவர்சிலைநிறுவும்குழுவினர் தலைவர்கே.ஜெயசிறில்தலைமையில் அங்கு விஜயம்செய்துள்ளனர்.

இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு உலகில்தமிழுக்கும்தமிழனுக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப்பெரியார் தெய்வப்புலவர்திருவள்ளுவர் எனலாம்.
அவரதுதிருக்குறள் மொழிஇனம்நாடுகடந்து முக்காலத்திற்கும் ஏற்ற்தத்துவநூலாகும். இதனால் இதனைஉலகப்பொதுமறைஎன்று அழைப்பர்.
சுருக்கமாகக்கூறினால் இதில் 42194 எழுத்துக்கள் 14000 சொற்கள் 1330 குறட்பாக்கள் 133அதிகாரங்கள் 3 பிரிவுகள் என்பனஅடங்குகின்றன.

இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு எதிர்வரும் 21ம் 22ம் 23ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்ட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்தமிழழ்நாடு உடையார்கோயில்குணா தெரிவித்தார்..

இம்மாநாட்டையொட்டி இந்தியாவிலிருந்து உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் இரண்டு சிலைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இலங்கைக்குகொண்டுவரமுன்பு அச்சிலைகள் தாங்கிய 6நாள் ஊர்வலம் கடந்த மாதம் இந்தியாவில் கன்னியாகுமரி தொடக்கம் சென்னை வரை இடம்பெற்றது.

அந்த 2 சிலைகளும் வடக்கில் யாழ். உரும்பிராயிலும் கிழக்கில் காரைதீவிலும் நிறுவப்படவிருக்கின்றன என சிலைகளை அன்பளிப்புச்செய்த ஏற்பாட்டாளர் தமிழ்நாடு தமிழ்த்தாய் அறக்கட்டறை நிறுவுனர் பெருங்கவிஞர் உடையார்கோயில் குணா கூறுகிறார்.வள்ளுவப்பெருமானின் 300 திருவள்ளுவர்சிலைகளை உலகம் பூராக நிறுவும் திட்டத்தின்கீழ் இலங்கையில் இவை நிறுவப்படவிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல்அவர்உலகின்பல பாகங்களிலும்300 திருவள்ளுவர் கற்சிலைகளைஅமைக்கும்பணியிலும்ஈடுபட்டுவருகிறார்.

முதலாவது உலக திருக்குறள்மாநாடு கடந்தவருடம் பெப்ருவரிமாதம்23ஆம்24ஆம்திகதிகளில்மலேசியாவில்கோலாகலாமாகநடைபெற்றது. கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில்நடைபெற்றஇந்நிகழ்வில்பன்னாட்டுபெரும்புலவர்களும் அறிஞர்களும்வருகைதந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக் கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -