முன்னாள் நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்தது உயர் நீதிமன்றம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக இருவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ள கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டுள்ளார்.​

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2013ம் ஆண்டு ஒருவருக்கு சார்பாக வழக்கொன்றின் தீர்ப்பை வழங்குவதற்காக 3 லட்சம் ரூபாவை லஞ்சமாக கோரியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக லஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாகவும், லஞ்சமாக பெற்ற 3 லட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -