பைஷல் இஸ்மாயில்-
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 6 வது செயற்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ”சர்வதேச சிந்தனையாளர் தினத்தை” முன்னிட்டு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு ஜலால்டீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான சித்திரம் வரையும் போட்டியும் பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (20) ஜலால்டீன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும் சமூக சேவையாளருமான தேச கீர்த்தி எம்.ஐ.முஹம்மது றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஊடகச் செயலாளருமான எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.அப்துல் றஹ்மான், உதவி அதிபர் கே.எல்.எம்.ஜசாஹிர், ஆசிரியர்கள், நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் என்.ஜே.நாசர், செயலாளர் ஜே.அர்சாத், எப்.நஜிகர், இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வேட்பாளர்களான கே.எல்.நஜாத், எஸ்.எம்.முபாரிஸ், எம்.என்.சப்னாஸ், எம்.ஏ.எம்.சர்பான் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
விஷேட தேவையுடைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற சித்திரம் வரையும் போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மூன்று மாணவர்களுக்கான பரிசில்களை இன்றைய பிரதம அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஏனைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும், பரிசில்களையும் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர், உப தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.



