உலக சாரணர் இயக்கத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட சாரண சமாதான இணைப்பாளர்களுக்கான வதிவிட பயிற்சி கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.
அமைப்பின் பிராந்திய பணிபாளர்,இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ஆகியோரினால் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான எம்.எப்.றிபாஸ்க்கு "சமாதானத்திற்கான தூதுவர்கள்" எனும் சான்றிதழ், பதக்கம்,என்பன வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த விழாவில் வெளிநாட்டு வளவாளர்கள், பிரதம உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று கல்முனை மாவட்டம் சார்பாக எம்.எப்.ரிபாஸ் மாத்திரம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


