கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. சல்மான் வஹாப்!




எச்.எம்.எம்.பர்ஸான்-

32 வருட கல்விப் பணியிலிருந்து ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. சல்மான் வஹாப் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

வாழைச்சேனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர் வாழைச்சேனை அந்நூர் பாடசாலையில் தனது முதலாவது ஆசிரியர் நியமனம் பெற்று 1988ம் ஆண்டு 8ம் மாதம் 22ம் திகதி தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1997ம் ஆண்டு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கு தனது ஆசிரியர் பணியை சிறப்பான முறையில் தொடர்ந்தார்.

பின்னர் 2000ஆம் ஆண்டு கல்குடா கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றிய இவர் 2008ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றுச் செல்லும் வரை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர், கலை பட்டம், முது கலைமாணி, பட்டப்பின் படிப்பு ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் சிறப்பான முறையில் தனது கல்விப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.

அத்தோடு கலைத் துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் பாடல்களை இயற்றிப் பாடுவதில் வல்லமை கொண்டவராகக் காணப்படுகின்றார். மலேசியாவில் நடைபெற்ற பல கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய இவர் அவர் இயற்றிப் பாடிய பாடல்கள் அடங்கிய இருவெட்டுக்களை வெளியிட்டுள்ளதோடு நினைவுப் பரிசில்களையும் பெற்றுள்ளார்.

இவர் கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கல்வியோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காக தற்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை அதிகரிக்க கல்வித் திட்டத்தோடு இணைந்த செயற்பாடுகளை பாடல்கள் மூலம் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -