மஸ்கெலியா பகுதியில் உயிர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பஸ்ஸில் அகப்பட்டு மரணம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்சிக் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் உயிர் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்துவந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனியார் பஸ்ஸில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பம் நேற்று (20) திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் உயிர்பாதுகாப்பு பரிவில் கடமையாற்றி நல்லதண்ணீர் பொலிஸ் நிலையத்தில் இணைப்பு செய்யப்பட்ட அஜித் வீரசிங்க வயது 40 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது குறித்த பொலிஸ் உத்தியோகஸத்தர் சிவனொளிபாதமலை விசேட கடமைக்காக இணைப்பு செய்யப்பட்டவர் என்றும், இவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திலிருந்து இரவு விசேட கடமைக்காக விபத்து ஏற்படுத்திய பஸ்ஸிலேயே சென்று குறித்த இடத்தில் சோதனைக்காக பஸ்களை நிறுத்தி வைத்திருந்த போது இறங்கி செல்லும் போது விபத்தினை ஏற்படுத்திய பஸ் சாரதி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டு பஸ்ஸினை வேகமாக எடுக்கும் போது குறித்த உத்தியோகஸ்த்தர் பஸ்ஸில் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -