மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்த ஐ.நா செயலரின் கூற்று வரவேற்கத்தக்கது!


கிழக்கு முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்

'மனித உரிமை மீறல்களுக்கு தேசிய இறைமை ஒரு போர்வையாக இருக்க முடி யாது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் நாடுகளையும் சமூகங்களையும் வலுப் படுத்துகின்றது அதுவே இறைமையையும் வலுப்படுத்துகின்றது. என ஐ.நா செயலா ளர் நாயகம் அன்ரனியோ கட்டரஸ், ஜெனிவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தேசிய இறைமை என்ற போர்வையின் கீழ் மனித உரிமை மீறல்கள் அவ்வப்போது உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை நமது நாட்டிலுள்ள இன வாத அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன. சிறுபான்மை சமூகங்களைத் திட்ட மிட்ட முறையில் நசுக்கி ஒடுக்கவேண்டும் என்ற எண்ண வெளிப்பாடு உத்வேகம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா.மன்றில் இந்த குரல் முன்வைக்கப்பட்டு ள்ளமை வரவேற்புக்குரியதாகும்.

அங்கு அவர் முன்வைத்துள்ள மற்றொரு கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது அதாவது, 'உலக அரங்கில் பதகளிப்புகளை தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வெளியை அதிகரிப்பதன் மூலம் அனுகூலங்களைப்பெற முயற்சிக்கப்படுகின் றது. வக்கிரமான அரசியல் கணக்கீடு இறுகப் பற்றிப்பிடித்துள்ளது. வாக்குகளைப் பெருக்குவதற்காக மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன' என்பதையும் அவர் சுட்டிகாட்டி உள்ளமை நமது நாட்டிலுள்ள சமகால அரசியல் நிலைமையை படம் பிடித்து காட்டுவதுபோல் அமைந்துள்ளது.

எனவே நம் நாட்டிலுள்ள சமகால அரசியல் தளத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கி யிருக்கும் நாம், வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சூட்சு மங்களையும் காய்நகர்தல்களையும் தெளிவுபடத் தெரிந்து கொள்ளவேண்டும்.

'அதிகாரம் நம்மிடம் உள்ளது எனவே நீங்கள் உங்களுக்கு தேவையான உதவிக ளைப் தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் எமக்கு வாக்களிப்பதே நல்லது' என்ற கோதாவில் பரப்புரைகள் மேற் கொள்ளப்படும் தருணமாக சமகாலம் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் சிறுபான்மை கட்சிகளை பிரித்தாளும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் அறிகுறிகளும் தென்படுகின்றன.

எனவே, இவ்விடயங்களில் நாம் அவதானமாக இருந்து எமது மனித உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதுடன் சமூகங்களின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக் கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமக்கு பெரும் துணையாக இருப்பது நமது ஒற்றுமை என்பதை நினைவில் கொண்டு நாம் ஒரணியாக செயற்பட திடசங்கற்பம் கொள்ளவேண்டும் - என்றுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -