ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி சப்ரி
எம்.என்.எம்.அப்ராஸ்-
சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களின் அறிமுக விழா மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில்
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது
இவ்விழாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம்.அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் உலகில் சட்டத்துறை , நிர்வாகத்துறை நீதித்துறைக்கு அப்பால் அடுத்தது ஊடகத்துறையே செல்வாக்கு மிக்கதாய் காணப்படுகின்றது. அன்று இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதலில் பின்னர் ஊடகங்கள் நடந்த முறை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாததாய் காணப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்
மேலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்
அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றினைய வேண்டும் .நாங்கள் நாட்டுப்பற்று உள்ளவராக மாற வேண்டும் அப்போது தான் எமது நாட்டை வளம் மிக்கதாய் கட்டியெழுப்ப முடியும்.
நாம் அரசியலை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால்
எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும்? அன்று மலேசியாவை மகாதீர் முகம்மது ,சிங்கப்பூரை லீ குவான் யூ ,தென் கொரியாவை ஜெனரல் பார்க் போன்றதலைவர்கள் எவ்வாறு தனது நாட்டை சிறந்த முறையில் கட்டியேழுபினார்கள். அதே போன்ற தலைவர் தான் கோடடாபய ராஜபக்ஷ என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஜனாதிபதியாக கோடடாபய வந்தவுடனயே முதலில் எந்த அரச திணைக்களங்களிலும் எனது புகைப்படத்தை வைக்க வேண்டாமெனச் சொன்னார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்த இரண்டாயிரம் பேரை இருநூறுராகக் குறைத்தார். வாகனப் பேரணியை இல்லாமல் செய்தார்.
சொகுசான வீடுகளை நிராகரித்தார். ஆடம்பரத்தை விரும்பாத ஒர் ஜனாதிபதி என்றால், அது எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தான். அன்று யுத்ததை வைத்து சிலர் உழைத்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் யுத்தம் முடிவுக்கும் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டில் நிம்மதியான சமாதானமான வாழ்வு உண்டானது .மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி அடைந்தது. என்றார்.
மேலும் இதில் காலம்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவரகளுக்கு இரண்டு நிமிடங்கள் பிராத்தனை இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக முன்னாள் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.உவைஸ் முஹம்மட், உலக சமாதான தூதுவரும், கெயா கென்ஸ்ட்ரக்சன் அன்ட் கென்ஸ்சல்டன் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.ஹிபத்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இதன் போது
சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரட்னம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபான், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர்.
மேலும் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதி தலைவர் எஸ். அஷ்ரஃப் கான், பிரதி செயலாளர்கள், பதவி நிலை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





