எந்த முறையும் இல்லாதவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களின் பலத்த ஆதரவுடன் வரலாறு காணாத அபார வெற்றியீட்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 08.02.2020 அன்று கண்டி பூஜாபியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்துவ 2 தொகுதியை ஆதரவாளர்களைப் பலப்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் செய்த தவறை உணர்ந்துள்ளனர். குறிப்பாக கண்டி முஸ்லிம்கள் கடந்த தேர்தலில் நிழந்த தவறை வட்டியும் முதலுமாக ஈடுசெய்ய திட்டமிட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக மிகவும் சிறந்த,மக்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளனர் என்று கூறியவாறு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்த, கண்டி மாவட்ட வேட்பாளராக களமிறங்க இருக்கும் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டார்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 25000 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்களுடன் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்களும் விசேட அதிதிகளாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன அவர்களும்
சிறப்பு அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காண்டி மாவட்டத்தில் களமிறங்கவுள்ள அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களும் பங்கெடுத்திருந்தனர்.





