முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், மஹர பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மாதர்களுக்காக நடாத்தப்பட்ட கேக் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் பயிற்சிப் பாடநெறியின் கண்காட்சியும் சான்றிதல் வழங்கும் நிகழ்வும் சென்ற சனிக்கிழமை (15) ஹுணுப்பிட்டி சாந்தி வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இப் பாடநெறி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஹர தேர்தல் தொகுதி அமைப்பாளர் திரு முக்தார் அவர்களின் வேண்டுகோளின்படி நடாத்தப்பட்டதுடன், நிகழ்வில் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், மஹர பிரதேச சபை உறுப்பினர் திரு. சைபுல் ஹாரிஸ், பாடநெறி ஆசிரியை திருமதி புஷ்பா, மஹர மாதர் சங்கத் தலைவி பாயிகா இல்யாஸ் மற்றும் டாக்டர் ஹிப்லா இல்யாஸ் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.