தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-
லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (23) திகதி மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன் பிடிக்க சென்ற ஒருவர் சடலம் ஒன்று கிடப்பதனை கண்டு அருகிலுள்ள ஒருவருக்கு தெரிவித்தனையடுத்து அவர் பொலிஸாருக்கு தெரிவித்ததனை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுமார்; 30-35 வயதிற்கும் மதிக்கத்தக்கவர் என்றும் இவர் யார் என இதுரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் நீதவானி மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர் நீர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவராவது கொலை செய்து நீர்த்தேக்கத்தில் போட்டனரா?என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -