மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 15 ஆந் திகதி தொடக்கம்; 2020 பெப்ரவரி 21 ஆந் திகதி வரையும் 134 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ம் ஆண்டு பெப்ரவரி 15 ஆந் திகதி தொடக்கம்; 2020 பெப்ரவரி 21 ஆந் திகதி வரை 134 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்;.
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 19 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அது போன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 28 பேர்;;, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 18 பேர், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 12 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேர்;, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 11 பேர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 07 பேர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 01 பேர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேர், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 08 பேர், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02, ஆகிய பகுதியில்; இனங் காணப்பட்டுள்ளனர்.

 இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணமும், மன்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒரு மரணமுமாக மொத்தம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தாh.;
மொத்தமாக கடந்தவாரம் 134 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆரையம்பதி மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -