முஸ்லிம் மக்களின் தனித்துவ அரசியல் குரலாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தனது 29ஆவது பேராளர் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ். அதன் கொள்கைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் உயர்ந்த ஜனநாயக -தார்மீக செயற்பாடுகளுக்கும் சிறந்த அடையாளாமாக இந்தப் போராளர் மாநாடு அமையப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது - இவ்வாறு ஸ்ரீல.முஸ்லிம் காங்கிர ஸின் பிரதித் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
முஸ்லிம் மக்களின் தனித்துவ அடையாளங்களை அழித்து சிதைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு இனவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதன் பிரதான அம்சமாக முஸ்லிம் மக்களின் அரசியல் குரல்கள் நசுக்கி ஒடுக்கப் படவேண்டும் என்ற அடக்குமுறை சிந்தனை பல்வேறு பக்கங்களிலும் பிரதானம் பெற்றுவருகின்றது. இதற்கான காய்நகர்த்தல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் முன்வைக்கப்பட்ட தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வைக் குழு வின் பரிந்துரையில்கூட முஸ்லிம் மக்களது மனிதஉரிமை ரீதியான உரிமைகளை புறந்தள்ளக்கூடிய வகையில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்று க்கு எதிராக குரல்கொடுத்து எமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது எமது பாரிய கடமையாகும்.
குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவில் தங்கியிருக்கக்கூடாது என்பதில் இனவாத சிந்தனை கொண்ட சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அவர் களது பிரதான திட்டம் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைத்து விட வேண்டும் என்பதில் கருக்கொண்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
நமக்கு சாதகமான அரசியல் சக்திகளை வளர்தெடுத்து சமூகங்களின் இருப்பை சிதைத்துவிட வேண்டும் என்பதில் இவற்றின் கவனம் முக்கியபட்டிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதனை அடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இவை தற்போது வேகமாக செயற்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இதற்காக நமது சக்தியை கட்டுக்கோப்போடு கட்டி யெழுப்ப வேண்டியது முக்கியமானதாகும்.
'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்பதற்கு ஏற்ப முஸ்லிம் மக்கள் தமக் காக உள்ள அரசியல் சக்தியை பலப்படுத்தி அதனூடாக தமது உரிமைகளை வென்றெடுக்க திடசங்கற்பம் கொள்ள வேண்டும். இம்முறை நாடாளுமன்றத்தில் இதற்கான எமது திடசங்கற்பத்தை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல்குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை இனவாத சக்தி கள் அறிந்து கொள்ளும் வகையில் எமது ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்டவேண்டும். இதற்கான சிறப்பான சந்தர்ப்பம் இந்தப் பொதுத் தேர்தல் என்பதை கருத்தில் கொண்டு நாம் எமது வாக்குபலத்தை பயன்படுத்து வோமாக! – என்றார்.
