தன்சானியாவிலுள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ன்சானியா நாட்டின் மோஷி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று இரவு பிரார்த்தனை கூட்டமொன்று நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிபாட்டாளர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணையால் அபிஷேகம் செய்ய விரைந்து வந்தபோது திடீரென சன நெரிசல் ஏற்பட்டது.

இந்த சன நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படு காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும் நெரிசலில் சிக்கி காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -