கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 2020 ஆம் ஆண்டிற்கான சம்பியன் கிண்ணத்தை அரபா இல்லம் ( நீலம்) 303 புள்ளிகளைப் பெற்று சுவீகரித்துக் கொண்டது.
.கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இன்று ( 21 ) மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் கெளரவ அதிதியாகவும் பாடசாலை பிரதி , உதவி அதிபர்கள் ,பாடசாலை விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் ,பழைமாணவர் சங்க செயலாளர் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , ,மோட்டார் போக்குவரத்து பிரதம பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் ,கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் ,ஙண் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் எம்.அல் அமீன் றிஸாத் ,கல்முனை ,சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இல்ல விளையாட்டுப் போட்டியில் அரபா இல்லம் 303 புள்ளிகளைப் பெற்று சம்பியன்களாகவும் , சபா இல்லம் 278 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் , மர்வா இல்லம் 231 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் , ஹிரா இல்லம் 182 புள்ளிகளைப்பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக கொண்டன.







