ஹட்டன் நகர வீதிகளை 10 கிலோ மீற்றர் காபட் செய்ய ஜனாதிபதி கோடடபாய நிதி ஒதுக்கீடு தலைவர் நன்றி தெரிவிப்பு.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நூறு வருடங்களுக்கு மேலாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிக்குட்பட்ட பல வீதிகள் குன்றும் குழுpயுமாக காணப்பட்டன.இந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த பல அரசாங்கம்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை. இந்நிலையில் புதியதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களிடம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கமைள ஹட்டன் நகர பிரதேசத்தில் 10 கிலோ மீற்றர் தூரம் காபட் இட நிதி துக்கியுள்ளதாகவும் இது குறித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் எஸ். பாலசந்திரன் தெரிவித்தார்.
ஹட்டன் புறநகர் பகுதியில் பல ஆண்டுகளாக குன்று குழியுமாக காணப்பட்ட வீதியினை காபட் செய்யும் பணியினை இன்று (27) ஆரம்பித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிதியின் மூலம் ,டிப்போ வீதி ,பொன்நகர் வீதி,ஹிஜ்ராபுரவீதி,இந்து மாசபை வீதி,டிக்கோயா வீதி,விலபர்ட் புரம்,பண்டாரநாயக்கபுரம் உட்பட அனைத்து வீதிகளும் காபட் செய்யப்படவுள்ளன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்;கையில் ஹட்டன் நகரம் என்பது, ஒரு சமாதான நகரமாகும். இந்த நகரத்தினை கடந்த காலங்களில் நாங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒரு குழுவாக இணைந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்,இன்று இச்சபையின் எதிர்க்கட்சி தலைவராக ஏ.ஜே.ம்.பாதிஸ் அவர்களே இருக்கிறார்கள.; எங்கள் மத்தியில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.எனவே தான் கடந்த காலங்களில் பல்வேறு வழிகளில் நிதியினை பெற்று ஹட்டன் நகர சபைபகுதியில் சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்தது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நகர அபிவிருத்திக்கென 67 லட்சம் ரூபா வினை இவ்வருடம் ஒதுக்கியுள்ளார்.
அதற்காக அபிவிருத்தி பணிகள் இடம்பெற உள்ளன.அத்தோடு பல பல அமைச்சுக்களிலிருந்து எமது நகரின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வந்த வண்ணம் உள்ளன. எனவே அவற்றிக்கான திட்ட வரைபுகள் நிறைவு பெற்றுவுடன் அடுத்த வருடம் ஆரம்ப பகுதியில் மேலும் பல அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வுக்கு எதிர்கட்சித்தலைவர் ஏ.ஜே.எம்.பாமிஸ் சமாசமாஜ கட்சியின் உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -