இலங்கையர்கள் 1000 பேரை சவுதி அரேபியாவில் பேருந்து சாரதிகளாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் வந்துள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் மேஜர் சுதத் அபேசிங்க, சவுதி அரேபியா பொது போக்குவரத்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொன்டிகோமர்ஸ் ரொபட் காலன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்கீழ் 1000 இலங்கையர்களுக்கு இந்த தொழிவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன், கனரக வாகன அனுமதிப்பத்திரங்களையுடைய 45 வயதுக்கு குறைந்த, சாரதியாக 2 வருடம் அனுபமுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
